ADDED : ஜன 30, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கையில் நடந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாசில்தார் மாணிக்க வாசகம் சான்றிதழ் வழங்கினார்.
சிவகங்கை மன்னர்மேல்நிலை பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், கல்வி, நுாலகத்துறை, பபாசி இணைந்து 3ம் ஆண்டு புத்தக திருவிழா பிப்., 6 வரை நடக்கிறது.
இந்த விழாவின் 3ம் நாளான நேற்று கல்லுாரி மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடைபெற்றது.
இதில், மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி மாணவி எஸ்.ஐஸ்வர்யா முதல் பரிசும், பி.நாகேஸ்வரி இரண்டாம் பரிசும்,திருமாஞ்சோலை பாண்டியன் சரஸ்வதி யாதவ் கல்லுாரி மாணவர் ஜனார்த்தனம், பள்ளத்துார் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லுாரி மாணவி ராஜி ஆகியோர் 3 ம் பரிசு பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாசில்தார் மாணிக்கவாசகம் சான்றிதழை வழங்கினார்.