தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பல்லவன் பயணிகளுக்கு தேவகோட்டை பஸ் தேவை

 பல்லவன் பயணிகளுக்கு தேவகோட்டை பஸ் தேவை

 பல்லவன் பயணிகளுக்கு தேவகோட்டை பஸ் தேவை


ADDED : மார் 25, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 06:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: பல்லவன் ரயிலில் சென்னையில் இருந்து காரைக்குடி வரும் பயணிகளுக்கு இரவில் தேவகோட்டை செல்ல போதிய பஸ் இயக்க வேண்டும்.

காரைக்குடியில் தினமும் காலை 5:40 மணிக்கு சென்னை புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிக்க தேவகோட்டையில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் வழியாக காரைக்குடி பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தேவகோட்டை பயணிகள் எளிதில் இந்த ரயிலை பிடித்து சென்னை செல்கின்றனர்.

அதே நேரம் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு இரவு 10:20 மணிக்கு வரும் இதே ரயிலில் வரும் தேவகோட்டை பயணிகளுக்கென, ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காரைக்குடி பஸ் ஸ்டாண்ட் வரை மட்டுமே 3 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு செல்ல பஸ் வசதி இல்லை.

திருச்சி - ராமேஸ்வரம் செல்லும் ஒரு பஸ் மட்டுமே காரைக்குடி வழியாக செல்கின்றன. அந்த பஸ்களில் ஏற்கனவே அதிக கூட்டம் உள்ள நிலையில், பல்லவன் ரயிலில் வரும் பயணிகள் தேவகோட்டை செல்ல பஸ்கள் இல்லாத நிலை ஏற்படுகிறது.

எனவே சென்னையில் இருந்து காரைக்குடிக்கு பல்லவன் ரயிலில் வரும் பயணிகளுக்காக காரைக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து தேவகோட்டைக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us