ADDED : அக் 30, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்,அக்.30--
திருப்புத்துாரில் ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட பனைவெல்லம் கூட்டுறவு விற்பனை சம்மேளனம்,தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம், தமிழ்நாடு பனை மேம்பாட்டு இயக்கம் இணைந்து நடத்தும் பனை ஓலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி முகாம் துவங்கியது.
மகளிருக்கு பனை ஓலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி முகாம் நவ. 22 வரை நடைபெறுகிறது. முகாமில் கதர் கிராம தொழில் வாரிய மாவட்ட குடிசைத் தொழில் ஆய்வாளர் முத்துக்குமார் வரவேற்றார்.
மதுரை உதவி இயக்குனர் சீனிவாசன் பயிற்சியை துவக்கி வைத்தார். தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் வினோதா பங்கேற்றார். மாவட்ட பயிற்சியாளர் ரமா பயிற்சி அளித்தார்.

