நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள கோவிலுாரில், பனை மரங்களுக்கு தீ வைத்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் கோவிலுார் அருகே உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கண்மாய் பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன.
நேற்று இப்பகுதியில் பல பனைமரங்கள் தீப்பிடித்து எரிந்தது. தமிழகத்தில் பனை மரங்களை காத்திட அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி பெற வேண்டும்.
உரிய அனுமதி கிடைக்காது என்பதால் சிலர் இதுபோன்று பனை மரத்திற்கு தொடர்ந்து தீ வைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மரத்திற்கு தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.