/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையுடன் இணைப்பு ஊராட்சி மக்கள் மறியல்
/
சிவகங்கையுடன் இணைப்பு ஊராட்சி மக்கள் மறியல்
ADDED : பிப் 14, 2025 07:23 AM

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியுடன் இணைக்க கூடாது எனக் கோரி வாணியங்குடி, அண்ணாமலை நகர் பகுதி மக்கள் இருவேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி ஆகிய 2 ஊராட்சிகளை இணைத்து நகராட்சியை விரிவாக்கம் செய்ய உள்ளனர்.
இதற்கு வாணியங்குடி ஊராட்சியில் உள்ள கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நகராட்சியுடன் வாணியங்குடி ஊராட்சியில் உள்ள கிராமங்களை இணைத்தால் 600க்கும் மேற்பட்ட குடுபத்தினருக்கு 100 நாள் வேலைவாய்ப்பு கிடைக்காது.
இதனால் 600 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தங்கள் கிராமத்தை நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும், வாணியங்குடிக்கு ஆய்வுக்கு வந்த கலெக்டர் தங்களை சந்திக்க மறுத்து சென்றதாகவும் கூறி நேற்றும் ஒரே நேரத்தில் வாணியங்குடியில் மானாமதுரை ரோட்டில் அமர்ந்தும், அண்ணாமலை நகரில் இளையான்குடி ரோட்டில் அமர்ந்தும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இரண்டு ரோட்டிலும் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தாசில்தார் சிவராமன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

