/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேலநெட்டூருக்குள் வராத பஸ் ஊராட்சி தலைவர் முறையீடு
/
மேலநெட்டூருக்குள் வராத பஸ் ஊராட்சி தலைவர் முறையீடு
மேலநெட்டூருக்குள் வராத பஸ் ஊராட்சி தலைவர் முறையீடு
மேலநெட்டூருக்குள் வராத பஸ் ஊராட்சி தலைவர் முறையீடு
ADDED : பிப் 16, 2024 05:15 AM
மானாமதுரை: மதுரையிலிருந்து மானாமதுரை வழியாக ஆர்.எஸ்.மங்கலம் செல்லும் அரசு பஸ்சை மேலநெட்டூர் கிராமத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர் வேண்டுகோள் எடுத்துள்ளார்.
மேலநெட்டூர் ஊராட்சி தலைவர் சங்கீதா ராஜ்குமார், எஸ். காரைக்குடியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித்திடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த வாரம் மானாமதுரையிலிருந்து மதுரை மற்றும் ஆர்.எஸ்.,மங்கலத்திற்கு புதிய வழித்தடத்தில் அரசு பஸ் சேவை துவக்கப்பட்டு சென்று வருகிறது.
இந்த பஸ் மானாமதுரையிலிருந்து ஆர்.எஸ்.மங்கலம் செல்லும் வழியில் மேல நெட்டூர் வழியாக செல்லும்போது பஸ் ஊருக்குள் வராமல் விலக்கு ரோடு வழியாக செல்கிறது. மேலநெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆகவே இந்த பஸ்சை மேல நெட்டூர் கிராமத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.