ADDED : மார் 19, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம், : திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவன முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி உற்ஸவ விழா மார்ச் 28ம் தேதி வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
அன்று மாலை 5:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வருதல், ஏப்ரல் 4ம் தேதி 101 தீச்சட்டி எடுத்தலும், 5ம் தேதி பால்குடம், பூக்குழி இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

