/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வெட்டுடையார் காளி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
/
வெட்டுடையார் காளி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
வெட்டுடையார் காளி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
வெட்டுடையார் காளி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
ADDED : மார் 20, 2024 12:11 AM

சிவகங்கை : கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி சுவாதி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பல்வேறு வேண்டுதல் நிறைவேற கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சியில் உள்ள வெட்டுடையார் காளியம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் நேற்று முன்தினம் பங்குனி சுவாதி பெருவிழாவை முன்னிட்டு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை நடந்தது.
நேற்று காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தங்க கொடி மரத்தில், பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
நேற்று இரவு 7:35 முதல் 8:30 மணிக்குள் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்வும், அதனை தொடர்ந்து கேடக வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது. பங்குனி விழாவை முன்னிட்டு தினமும் காலை அம்மன் கேடக வாகனத்திலும், இரவில் பூதகி, கிளி, அன்னம், காமதேனு, ரிஷபம், சிம்மம் வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.
விழாவின் 9ம் நாளான மார்ச் 27 அன்று அதிகாலை 5:15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள்கிறார். அன்று காலை 9:15 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா வருகிறார். மார்ச் 28 அன்று காலை 10:35 மணிக்கு மேல் தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சந்தனம், பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி செலுத்துவர். அன்று இரவு அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருள்வார்.
மார்ச் 29 அன்று காலை 9:15 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவமும், இரவு 9:15 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். விழா ஏற்பாட்டை ஹிந்து அறநிலைய இணை கமிஷனர் பழனிக்குமார் தலைமையில் உதவி கமிஷனர்கள் சங்கர், ஞானசேகரன், செயல் அலுவலர் நாராயணி ஆகியோர் செய்து வருகின்றனர்.

