ADDED : மார் 29, 2025 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனத்தில் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு த.மா.கா., சார்பில் அன்னதான விழா நடந்தது.
விழாவில் பேரூராட்சி கவுன்சிலரும், த.மா.கா., மாநில தொண்டரணி தலைவரான அயோத்தி ஏற்பாட்டின் பேரில் அன்னதான விழா நடந்தது. பார்க் பிளாசா ஓட்டல் உரிமையாளர் கண்ணன் தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் விளத்துார் மணி முன்னிலை வகித்தார்.
இரவு 10:00 மணிக்கு கோயில் எதிரே சித்தன் ஜெயமூர்த்தியின் பல்சுவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் பாரத்ராஜா, வெங்கேடஸ்வரி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.