ADDED : மார் 12, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
இளையான்குடி: இளையான்குடியில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்று வருகிறது. நேற்று இளையான்குடியில் நடைபெற்ற போலீஸ் அணிவகுப்பிற்கு சிவகங்கை டி.எஸ்.பி., அமல அட்வின் தலைமை தாங்கினார். மத்திய ரிசர்வ் படையின் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயேந்திர சிங் மற்றும் இளையான்குடி இன்ஸ்பெக்டர் பொன் தேவி மற்றும் போலீசார் நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர் வலமாக வந்தனர்.
