ADDED : மார் 16, 2026 07:33 AM

அ நிறம் | அளவு
சிவகங்கை: சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து காளையார்கோவிலில் துணை ராணுவ படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மாவட்டத்திற்கு உட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி) ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ படையை சேர்ந்த வீரர்கள் 80 பேர் வருகை தந்துள்ளனர்.
நேற்று காளையார்கோவில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் துணை ராணுவ படையினர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
