/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் மீது வழக்கு
/
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் மீது வழக்கு
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் மீது வழக்கு
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் மீது வழக்கு
ADDED : பிப் 04, 2024 04:39 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் வாகனத்தை இயக்கினால் அவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதியப்படும் என எஸ்.பி., அர்விந்த் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, 18 வயது பூர்த்தியடையாத இளஞ்சிறார்களுக்கு அவர்களின் பெற்றோர் டூவீலர்களை வழங்குவதால் அவர்கள் அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துவதுடன் அவர்களும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
இதை தடுப்பதற்காக வாகனத்தை ஓட்டுவதற்கு கொடுத்த பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
காரைக்குடியில் ஒரு சிறுவனுக்கு டூவீலரை வழங்கிய பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீதித்துறை நடுவர் இந்த குற்றத்திற்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் ஒரு வருட காலத்திற்கு டூவீலரின் பதிவை (Registration) நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
அபாராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.
இதுபோன்று வாகனம் ஓட்ட தகுதியற்ற சிறுவர்களுக்கு வாகனங்கள் வழங்கும் பெற்றோர் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199A வின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.