/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி முன் பயணியர் நிழற்குடை மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
/
பள்ளி முன் பயணியர் நிழற்குடை மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
பள்ளி முன் பயணியர் நிழற்குடை மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
பள்ளி முன் பயணியர் நிழற்குடை மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : அக் 09, 2025 11:21 PM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக பள்ளி முன் அமைக்கப்படும் நிழற்குடைக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிரான்மலையில் உள்ள அரசு நுாற்றாண்டு துவக்கப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி முன் தமிழக சுற்றுலாத் துறை சார்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களை இணைக்கும் முக்கிய புறவழிச் சாலையில் இப்பள்ளி அமைந்துள்ள நிலையில், அதன் முன்பாக நிழற்குடை அமைக்கப்பட்டால், பஸ்கள் நிற்கும் போது, மற்ற வாகனங்களால் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக கூறி பெற்றோர்களும், ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நிழற்குடைக்கு இடம் தேர்வு செய்யப்பட்ட உடனே பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி பள்ளி முன் நிழற்குடை அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
சுற்றுலாத்தலமான பிரான்மலையில் போஸ்ட் ஆபிஸ் அருகில் பெரிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அத்திட்டம் என்ன ஆனது. பள்ளி முன் மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் அவசரமாக நிழற்குடை கட்ட வேண்டிய அவசியம் என்ன பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.