/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் இருளில் பயணிகள் தவிப்பு
/
தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் இருளில் பயணிகள் தவிப்பு
ADDED : பிப் 21, 2025 06:41 AM

தேவகோட்டை: தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் போதிய விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய நகர் தேவகோட்டை. ஊரின் மையப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. பஸ் ஸ்டாண்டிற்கு தினசரி 200க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. பள்ளி, கல்லுாரிகள் நகரில் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் வந்து செல்கின்றனர். மாலையில் வீடு திரும்ப காத்திருக்கும் பயணிகள், மற்றும் மாணவர்கள் தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் போதிய வெளிச்சம் இல்லாததால் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
பஸ் ஸ்டாண்டிலுள்ள இரண்டு கடைகளை தவிர மற்ற கடைகள் வாடகை பாக்கிக்காக மூடப்பட்டு உள்ளன. கடைகள் மூடப்பட்டுள்ளதால் வெளிச்சத்திற்கு வழி இல்லை.பயணிகள் தங்க ஒதுக்கப்பட்ட இடம் சுகாதாரமின்றி இருட்டாக உள்ளது. பயணிகள் அமரும் இடத்திற்கு அருகில் உள்ள இலவச கழிப்பறையும் இருட்டில் தான் உள்ளது.
பஸ் ஸ்டாண்டின் மேற்கு பகுதியில் தான் அரசு விரைவு பேருந்துகள், அரசு டவுன் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. பஸ்கள் நிற்கும் பகுதியில் வெளிச்சம் வரும் என எதிர்பார்த்தால் பஸ்சில் ஒரு பகுதியில் சிம்னி விளக்கை விட மோசமாக எரிகிறது. நகராட்சி சார்பில் கூடுதல் விளக்கு பொருத்த வேண்டும். பஸ்களில் எல்.இ.டி. விளக்குகளை பொருத்தி இருளில் தவிக்கும் பயணிகளை காப்பாற்ற வேண்டும்.