/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நடுவழியில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் மானாமதுரையில் பயணிகள் அவதி
/
நடுவழியில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் மானாமதுரையில் பயணிகள் அவதி
நடுவழியில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் மானாமதுரையில் பயணிகள் அவதி
நடுவழியில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் மானாமதுரையில் பயணிகள் அவதி
ADDED : டிச 25, 2025 05:41 AM

மானாமதுரை: மானாமதுரையில் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்சுக்கு இடையே ஏற்பட்ட நேர பிரச்னையால் நடுவழியில் அரசு பஸ் நிறுத்தப்பட்டு டிரைவர்களிடையே வாக்குவாதம் நடந்ததால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்புத்துாருக்கு தனியார் பஸ் சென்றது. கமுதியில் இருந்து காரைக்குடிக்கு அரசு பஸ் சென்றது. நேற்று காலை நேரம் எடுப்பதில் உள்ள பிரச்னையால் இரு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தனியார் பஸ் முன்னரே சென்றதால், பின்னால் சென்ற அரசு பஸ்சை, தனியார் பஸ்சை குறுக்கே நிறுத்தி, அரசு பஸ் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை நேரத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் அரசு ஊழியர்கள் மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இதேபோன்று சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் நேரப்பிரச்சனை காரணமாக அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இடையே தகராறு, வாக்குவாதம் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த விஷயத்தில் மாவட்ட போக்குவரத்து அலுவலர் உரிய நடவடிக்கை எடுத்து, உரிய நேரத்தில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

