/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எப்.சி., போய் வந்த அரசு டவுன் பஸ்; படி உடைந்ததால் பயணிகள் அவதி
/
எப்.சி., போய் வந்த அரசு டவுன் பஸ்; படி உடைந்ததால் பயணிகள் அவதி
எப்.சி., போய் வந்த அரசு டவுன் பஸ்; படி உடைந்ததால் பயணிகள் அவதி
எப்.சி., போய் வந்த அரசு டவுன் பஸ்; படி உடைந்ததால் பயணிகள் அவதி
ADDED : ஜன 02, 2025 11:50 PM

மானாமதுரை; மானாமதுரையில் ஓடும் அரசு டவுன் பஸ்கள் ஓட்டை ,உடைசலாக உள்ளது. எப்.சி.,க்கு போய் வந்த பஸ்சில் படி உடைந்ததால் பயணிகள் சிரமப்பட்டனர்.
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து சிவகங்கை, இளையான்குடி, பரமக்குடி, நரிக்குடி, திருப்புவனம், வேதியரேந்தல், தாயமங்கலம், காளையார்கோயில், கட்டிக்குளம், கொட்டகாட்சியேந்தல், வீரசோழன் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் மிகவும் ஓட்டை உடைசலாக இருப்பதால் பாதி வழியிலேயே அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது.
பயணிகள் மற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானாமதுரை,வேதியரேந்தல் இடையே ஓடும் 16ம் நம்பர் டவுன் பஸ் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எப்.சி.,க்கு சென்று வந்த நிலையில் நேற்று காலை மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து சிவகங்கை சென்ற போது பைபாஸ் பஸ் ஸ்டாப் அருகே பின்பக்க படி உடைந்ததால் பயணிகள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பஸ்சில் ஏறி இறங்க முடியவில்லை.
இப்பஸ்சில் வந்தவர்களை மாற்று பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக அரசு இந்த புத்தாண்டிலாவது மானாமதுரை பகுதியில் ஓடும் ஓட்டை,உடைசல் பஸ்களுக்கு பதிலாக புதிய அல்லது நல்ல நிலையில் ஓடக்கூடிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

