/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரேக் பழுதால் பயணியர் அவதி
/
எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரேக் பழுதால் பயணியர் அவதி
ADDED : அக் 01, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து நேற்று அதிகாலை 5:45 மணிக்கு, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் பயணியருடன் சென்னைக்கு கிளம்பியது. செட்டிநாடு ரயில் நிலையம் அருகே சென்ற போது, ரயிலின் கடைசியில் இருந்த முன்பதிவில்லா பெட்டியில் பிரேக் பழுதாகி, புகை வந்தது. இதையடுத்து, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இது குறித்து, ரயில் ஊழியர்கள், இன்ஜினியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஜினியர்கள் வந்து பழுதை சரி செய்தனர். பின்னர், 50 நிமிடங்கள் தாமதமாக ரயில் சென்னை புறப்பட்டுச் சென்றது. இதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல், பயணியர் அவதி அடைந்தனர்.