/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
படேல் 150 வது பிறந்த நாள் ஒற்றுமை விழிப்புணர்வு ஊர்வலம்
/
படேல் 150 வது பிறந்த நாள் ஒற்றுமை விழிப்புணர்வு ஊர்வலம்
படேல் 150 வது பிறந்த நாள் ஒற்றுமை விழிப்புணர்வு ஊர்வலம்
படேல் 150 வது பிறந்த நாள் ஒற்றுமை விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : நவ 26, 2025 03:57 AM

சிவகங்கை: சிவகங்கையில் நேரு யுவகேந்திரா சார்பில் வல்லபாய் படேல் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சிவகங்கை அரண்மனை வளாகத்தில் துவங்கிய விழாவிற்கு சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமை வகித்தார். கலெக்டர் பொற்கொடி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாவட்ட நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் வரவேற்றார்.
அழகப்பா பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் நடராஜன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன், மன்னர் பள்ளிகளின் செயலர் குமரகுரு, தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மனோஜ்குமார் சர்மா, நேரு யுவகேந்திரா ஓய்வு ஒருங்கிணைப்பாளர் ஜவஹர், சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனர் பரமசிவம் பங்கேற்றனர்.
தேசிய இளையோர் பங்கேற்பாளர் ஷிபா நன்றி கூறினார். ஒற்றுமை விழிப்புணர்வு ஊர்வலத்தில் சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி, கேந்திரிய வித்யாலயா பள்ளி, சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி மைய மாணவர்கள் பங்கேற்றனர்.

