UPDATED : ஜூன் 07, 2026 05:25 PM
ADDED : ஜூன் 07, 2026 05:20 PM

அ நிறம் | அளவு
காரைக்குடி:காரைக்குடி அருகே பாதரக்குடி 4 வழிச்சாலையில் மேம்பால பணிக்கு பின் கண்மாயை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாதரக்குடி புதுக்கண்மாய் நீர்பாசனம் மூலம் 150 ஏக்கரில் விவசாயிகள் பயன்பெற்று வந்தனர். இக்கண்மாயில் இருந்து 3 மடைகள் மூலம் பாசனம் நடந்தது. காரைக்குடி - மேலூர் 4 வழி சாலை பணிக்காக இக்கண்மாயின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணி நடந்தது. இதனால் கண்மாய் மடைகள் அனைத்தையும் மூடினர். கண்மாயின் குறுக்கே பாலம் கட்டும் பணியால் கண்மாய் முற்றிலும் பாழாகிவிட்டது. கண்மாய் முழுவதும் பாதிக்கப்பட்டுவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே புதுக்கண்மாயை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
///
