/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு இல்லாமல் நோயாளிகள் அவதி
/
இளையான்குடி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு இல்லாமல் நோயாளிகள் அவதி
இளையான்குடி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு இல்லாமல் நோயாளிகள் அவதி
இளையான்குடி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு இல்லாமல் நோயாளிகள் அவதி
ADDED : பிப் 05, 2025 10:01 PM

இளையான்குடி; இளையான்குடி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடியை சுற்றியுள்ள 55 ஊராட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளைச் சேர்ந்த மக்களும் மருத்துவ தேவைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இங்கு தினம்தோறும் 400க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும்,20க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் கர்ப்பிணிகளும் சிகிச்சை பெறுகின்றனர். அடிப்படை வசதிகளான குடிநீர்,ஜெனரேட்டர்,போதிய கட்டட வசதி இல்லாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
நோயாளிகள் சிலர் கூறியதாவது: இம் மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையினால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். மருத்துவமனை வளாகம் முழுவதும் செடிகள்,கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் தொல்லை அதிகமாக உள்ளது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்து 2 வருடங்களுக்கும் மேலாகியும் அதனை சரி செய்யவில்லை.
நோயாளிகள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். ஜெனரேட்டரும் பழுதாகி இருப்பதால் மின்தடை நேரங்களில் மருத்துவமனை இருளில் மூழ்கி கிடக்கிறது. இரவு நேர காவலாளி பணியிடமும் காலியாக இருப்பதால் குடிமகன்களின் தொல்லையால் நோயாளிகள்,செவிலியர்கள்,பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.