/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை நகர் நல மையம் முன் தேங்கிய மழை நீர் நோயாளிகள் தவிப்பு
/
சிவகங்கை நகர் நல மையம் முன் தேங்கிய மழை நீர் நோயாளிகள் தவிப்பு
சிவகங்கை நகர் நல மையம் முன் தேங்கிய மழை நீர் நோயாளிகள் தவிப்பு
சிவகங்கை நகர் நல மையம் முன் தேங்கிய மழை நீர் நோயாளிகள் தவிப்பு
ADDED : நவ 04, 2024 07:10 AM

சிவகங்கை : சிவகங்கை, மஜீத் ரோட்டில் நகர் நல மையம் முன் தேங்கியுள்ள மழை நீரால், நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
இங்கு, ரூ.80 லட்சத்தில் கட்டிய புதிய கட்டடத்தில் நகர் நல மையம் செயல்படுகிறது. இங்கு 7 படுக்கை வசதியுடன், மகப்பேறு, பொது சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. டாக்டர், 3 நர்சு, மருந்தாளுநருடன் 24 மணி நேரமும் இந்த மையம் செயல்படுகிறது.
இதுவரை இம்மையத்திற்கு சுற்றுச்சுவர் வசதி செய்யப்படவில்லை. இதனால், மழை காலத்தில் சுகாதார மையம் முன் மழை நீர் தேங்கியுள்ளன. மின்விளக்கு வசதியும் இன்றி, இரவில் விஷ ஜந்துக்களின் அச்சத்தில் ஊழியர்கள் தவிக்கின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம், நகர் நல மையம் முன் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதுடன் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.