ADDED : ஏப் 20, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை :  தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கண்ணுச்சாமி தலைமை வகித்தார். ஏப்.24 அன்று சென்னையில் மகளிர் உரிமைத்துறை இயக்க அலுவலகம் முன் நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. மாவட்ட செயலாளர் குகன் சண்முகம் முற்றுகை போராட்டம் குறித்து பேசினார்.
மாநில செயலாளர் சங்கரநாராயணன்  கலந்துகொண்டார். மாவட்ட பொருளாளர் சரோஜினி வரவு செலவு அறிக்கையினை சமர்ப்பித்தார். துணைத் தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.

