நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். துணை தலைவர் குருசாமி, துணை செயலாளர் திருமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ராமையா, மகளிர் அணி செல்வசுந்தரி முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் முத்துராமலிங்கம் சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் வயது 80 கடந்த அரசு ஓய்வு பெற்ற ஊழியர்கள் மயிலப்பன், ஜான், கனகராஜ், அந்தோணி, அய்யாக்கண்ணு, கணேசன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தினர். பொருளாளர் சுப்பையா நன்றி கூறினார்.