/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் ஓய்வூதியர் தினம்
/
திருப்புத்துாரில் ஓய்வூதியர் தினம்
ADDED : ஜன 09, 2024 12:09 AM
திருப்புத்துார் : திருப்புத்துாரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க வட்டக் கிளை சார்பில் ஓய்வூதியர் தினம் நடந்தது.
வட்டத்தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார். வட்டச் செயலர் அர்ச்சுனன் வரவேற்றார். மாநில செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் மாநில செயலர் ராபர்ட், மாவட்ட தலைவர் திரவியம், மாவட்ட பொருளாளர் ஹக்கீம், மாவட்டத் துணைத்தலைவர் வீரபாண்டியன், மாவட்ட இணைச் செயலாளர் அப்துல் அஜீஸ், மாநில செயற்குழு முத்துமாடன், மாவட்ட தணிக்கையாளர் வாழவந்தான் ஓய்வூதியம் குறித்து விளக்கினர். வட்டதுணைத் தலைவர் முத்தையா நன்றி கூறினார்.
மதுரை ராக்ஸ் மருத்துவமனை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மனவளக்கலை நிர்வாகிகள் ஏ.சுப்பிரமணியன், வி.சுப்பிரமணியன் யோகப்பயிற்சி அளித்தனர்.