ADDED : அக் 13, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரவியம் தலைமை வகித்தார்.
சம்பள கமிஷன் அளிக்கும் ஓய்வூதிய உயர்வை பழைய ஓய்வூதியர்களுக்கு மறுக்கும் நிதிச்சட்ட 2025 பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும். 8வது சம்பள குழுவை அமைக்க வலியுறுத்தி பேசினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர சுப்பிரமணியன், வாசுகி, சரோஜினி, அந்தோணிராஜ், ராபர்ட், நீலமேகம், அய்யாத்துரை, வீரபாண்டியன், முத்துராமலிங்கம் பங்கேற்றனர். மாவட்ட நிர்வாகி வாழவந்தான் நன்றி கூறினார்.