ADDED : ஜன 20, 2024 04:46 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் நாட்டார்கள் காவடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
காரைக்குடி அருகே ஜெயங்கொண்டான் பகுதியில் இருந்து ரத்தினவேல் அனைத்து நாட்டார்கள் காவடி ஜன. 17ம் தேதி புறப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ., சோழன் பழனிச்சாமி தலைமையில் 151 காவடிகளை பக்தர்கள் பாதயாத்திரை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
நேற்று மதியம் மருதிபட்டி கிராமத்தில் இக்காவடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சதுர்வேதமங்கலம் வழியாக சிங்கம்புணரி வந்த காவடிக்கு பா.ஜ., மற்றும் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிருங்காக்கோட்டை விலக்கு ரோட்டில் உள்ள தனியார் மில்லில் பஜனை மற்றும் காவடிகளுக்கு சிறப்பு நடத்தப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிறகு புறப்பட்டுச் சென்ற காவடி நத்தம் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் வழியாக பழநி சென்று அங்கு முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட உள்ளது.