/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மண்ணில் புதைந்த நிழற்குடை கொல்லங்குடியில் மக்கள் தவிப்பு
/
மண்ணில் புதைந்த நிழற்குடை கொல்லங்குடியில் மக்கள் தவிப்பு
மண்ணில் புதைந்த நிழற்குடை கொல்லங்குடியில் மக்கள் தவிப்பு
மண்ணில் புதைந்த நிழற்குடை கொல்லங்குடியில் மக்கள் தவிப்பு
ADDED : நவ 24, 2025 09:28 AM

சிவகங்கை: கொல்லங்குடியில் புதைந்துள்ள நிழற்குடையால் பயணிகள் மழையிலும் வெயிலிலும் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
சிவகங்கை அருகே உள்ளது கொல்லங்குடி. இந்த கிராமத்தில் வெட்டுடையாள் காளி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி 100க்கும் மேற்பட்ட பக்தர்களும் விசேஷ காலங்களில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். சுற்றியுள்ள அரியாகுறிச்சி, உடவயல், விட்டனேரி, முத்துார், வாணியங்குடி, மேப்பல் கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து தான் பிற பகுதிகளுக்கு பஸ்சில் செல்ல வேண்டும்.
இந்த பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்குடை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. முழுவதும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழை பெய்தால் அருகில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு முன் ஒதுங்கி நிற்க வேண்டிய சூழல் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் பக்தர்கள் அதிகம் வந்தும் செல்லும் கொல்லங்குடியில் நிழற்கூரை அமைக்க வேண்டும்.