/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மீன்பிடித் திருவிழாவில் மீன்களை அள்ளிய மக்கள்
/
மீன்பிடித் திருவிழாவில் மீன்களை அள்ளிய மக்கள்
ADDED : ஏப் 13, 2025 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே நடந்த மீன்பிடித் திருவிழாவில் நிறைய மீன்கள்கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
மு.சூரக்குடி பூதணிக் கண்மாய் நிறைந்து ஆயக்கட்டு பகுதிகளில் அறுவடை முடிவற்ற நிலையில் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது.
நேற்று காலை 8:30 மணிக்கு கிராமப் பெரியவர்கள் மீன்பிடித் திருவிழாவை துவக்கி வைத்தனர்.
மக்கள் ஒரே நேரத்தில்கண்மாயில் இறங்கி ஊத்தா, பரி, வலை, சேலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர்.
பலருக்கும் கெண்டை, கெளுத்தி, விரால் என சிறியது முதல் பெரியது வரையினான மீன்கள் அதிக அளவில் கிடைத்தது.