/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெற்குப்பையில் 60 குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு கலெக்டரிடம் புகாரளித்த மக்கள்
/
நெற்குப்பையில் 60 குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு கலெக்டரிடம் புகாரளித்த மக்கள்
நெற்குப்பையில் 60 குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு கலெக்டரிடம் புகாரளித்த மக்கள்
நெற்குப்பையில் 60 குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு கலெக்டரிடம் புகாரளித்த மக்கள்
ADDED : ஜூன் 23, 2025 11:46 PM
சிவகங்கை: திருப்புத்துார் அருகே நெற்குப்பை கோயில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் ஒதுக்கி வைத்த 60 குடும்பத்தினர் கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.
நெற்குப்பை அருகே பரியாமருதுபட்டி கோயிலில் நெற்குப்பை நகரத்தார், வடக்கு, கீழத்தெரு மக்கள் இணைந்து விழாக்களை நடத்துவது வழக்கம். கோயிலில் செய்த வரவு செலவு விபரங்களை வெளியிட வேண்டும் என கீழத்தெரு முக்கியஸ்தர்களிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதில் ஆத்திரமுற்ற அவர்கள், கீழத்தெருவை சேர்ந்த 60 குடும்பத்தை தள்ளி வைப்பதாக கூறினர். இதனால், நெற்குப்பை பகுதியில் நடக்கும்கோயில் விழாவில் 60 குடும்பத்தினர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் மே 10ம் தேதி பரியாமருதுபட்டி பரியா மருதீஸ்வரர் கோயில் வருடாபிேஷக விழாவை அனைவரையும் அழைத்து நடத்த வேண்டும்என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.அதற்கு பின்னரும் 60 குடும்பத்தை சேர்க்காமல் வருடாபிேஷகத்தை நடத்தி விட்டனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட நெற்குப்பை கீழத்தெருவை சேர்ந்த 60 குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரில் ஜூன் 30 முதல் ஜூலை 10 வரை பரியாமருதுபட்டி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் நடக்க உள்ள ஆனி உற்ஸவ தேர்திருவிழாவில் தங்களையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கிராம மக்களிடம் தெரிவித்தார்.