/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பட்டாதாரர்களை 'கோமாளியாக்கும்' வருவாய்த்துறை கலெக்டரிடம் புகார் அளித்த மக்கள்
/
பட்டாதாரர்களை 'கோமாளியாக்கும்' வருவாய்த்துறை கலெக்டரிடம் புகார் அளித்த மக்கள்
பட்டாதாரர்களை 'கோமாளியாக்கும்' வருவாய்த்துறை கலெக்டரிடம் புகார் அளித்த மக்கள்
பட்டாதாரர்களை 'கோமாளியாக்கும்' வருவாய்த்துறை கலெக்டரிடம் புகார் அளித்த மக்கள்
ADDED : டிச 23, 2025 05:40 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே காடனேரியில் உள்ள நில பட்டாவில் கணினி திருத்தத்தின் போது ஏற்பட்ட குறைபாடு சார்ந்த புகாரின் மீதான விசாரணை கோட்டாட்சியரிடம் இருக்கும் போது, அதே பட்டா எண்ணில் உள்ள நிலத்தை வேறுநபர் பெயருக்கு பட்டா கொடுத்ததை கண்டித்து பாதிக்கப்பட்டோர் 'கோமாளி' வேடமிட்டு கலெக்டர் அலு வலகத்தில் புகார் அளித்தனர்.
சிவகங்கை அருகேயுள்ள காடனேரி சுப்பிர மணியன். இவரது தந்தை பெயரில் சர்வே எண் 143/11ல் 33 சென்ட் நிலம் உள்ளது. வருவாய்துறை கணினி திருத்தத்தின் போது, தவறுதலாக பட்டா மாறுதல் செய்து பதிவு செய்து விட்டனர்.
இது குறித்து சுப்பிர மணியன் சிவகங்கை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தார். இந்த பட்டா உரிமையாளரின் தந்தை பெயர் கணினி திருத்தத்தில் மாறியது எப்படி என்பது குறித்து 2015ம் ஆண்டில் இருந்தே சிவகங்கை கோட்டாட்சி யர் விசாரணை நடத்தி வருகின்றார்.
10 ஆண்டாக விசாரணை நடைபெற்று வந்தபோதும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. ஒரு பட்டா குறித்த விசாரணை கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் இருந்தால், கோட்டாட்சியர் இறுதி முடிவு அறிவிக்கும் வரை, அப்பட்டாவின் மீதான எந்தவொரு பரிந் துரையும் தாசில்தார், துணை தாசில்தார் மேற்கொள்ள கூடாது.
ஆனால், இந்த நடை முறையை மீறி சிவகங்கை துணை தாசில்தார், காடனேரியில் சர்வே எண் 143/11 ல் அழகுதேவரின் பெயரில் இருந்த 33 சென்ட் நிலத்தை அதே பட்டா எண்ணிற்கு, சாமிநாதன் என்பவரது பெயருக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன், நேற்று குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபியிடம் புகார் மனு அளித்துள்ளார். இதற்காக சுப்பிரமணியன், அவரது மனைவி உட்பட குடும்பத்தினர் 'கோமாளி' வேடமிட்டு மனு, பட்டா நகலுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இருந்தனர்.
விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் சிவகங்கை கோட் டாட்சியர் ஜெபி கிரேசியா கூறியதாவது:
காடனேரியில் சர்வே எண் 143/11 தொடர்பாக கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைக்கு கூட (டிச.,22) புகார்தாரரை விசாரணைக்கு அழைத்து உள்ளேன். இதற்கிடையில் அதே பட்டா எண்ணிற்கு வேறு ஒருவர் பெயரில் பட்டா பதிவு செய்தது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

