/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருமாஞ்சோலையில் வங்கி கிளை அவசியம் மக்கள் கோரிக்கை
/
திருமாஞ்சோலையில் வங்கி கிளை அவசியம் மக்கள் கோரிக்கை
திருமாஞ்சோலையில் வங்கி கிளை அவசியம் மக்கள் கோரிக்கை
திருமாஞ்சோலையில் வங்கி கிளை அவசியம் மக்கள் கோரிக்கை
ADDED : ஏப் 04, 2025 05:50 AM
பூவந்தி: திருமாஞ்சோலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேவையை தொடர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை- - மதுரை ரோட்டில் உள்ள திருமாஞ்சோலையை சுற்றிஅரசனூர், இலுப்பக்குடி, பாப்பாகுடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமமக்கள் தங்கள் தேவைகளுக்கு திருமாஞ்சோலை வந்து செல்கின்றனர். திருமாஞ்சோலையைச் சுற்றிலும் பொறியியல், ஆசிரியர், சட்டம், கலை அறிவியல் உள்ளிட்ட 10க்கும் மேற் பட்ட கல்வி நிறுவனங்கள், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம், நுகர்பொருள் வாணிப கழக கோடவுன், தனியார் ஸ்பின்னிங் மில் அமைந்துள்ளன.
கல்வி நிறுவனங்களில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். கல்வி, தேர்வு, நுழைவு தேர்வு கட்டணம் வங்கிகள் மூலமே செலுத்த வேணடும்.
இதுதவிர அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வங்கிகள் மூலமாகவே சம்பளம் வழங்கி வருகின்றன. 100 நாள் திட்டம் உள்ளிட்டவற்றிற்கும் வங்கிகள் மூலமாகவே சம்பளம் வழங்கப்படுகிறது.
திருமாஞ்சோலையில் ஒரே ஒரு தனியார் வங்கி மட்டும் செயல்படுகிறது. அதிலும் தினசரி 500க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்வதால் மாணவ, மாணவியர்கள் உரிய நேரத்தில் கட்டணம் செலுத்த முடிவதில்லை.
இதற்காக சிவகங்கை, மதுரை, திருப்புவனம் செல்ல வேண்டியுள்ளது. எனவே திருமாஞ்சோலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை மற்றும் எம்.டி.எம்., மையத்தை திறக்க வேண்டும்.

