/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காலிமனைகளில் முட்புதர் விஷபூச்சி அச்சத்தில் மக்கள்
/
காலிமனைகளில் முட்புதர் விஷபூச்சி அச்சத்தில் மக்கள்
காலிமனைகளில் முட்புதர் விஷபூச்சி அச்சத்தில் மக்கள்
காலிமனைகளில் முட்புதர் விஷபூச்சி அச்சத்தில் மக்கள்
ADDED : ஜன 16, 2025 05:05 AM
தேவகோட்டை: தேவகோட்டையில் நகராட்சி உத்தரவிட்டும் காலிமனைகளில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றாததால், விஷபூச்சிகளின் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
தேவகோட்டையில் குடியிருப்புகளுக்கு அருகே காலிமனைகள் அதிகளவில் உள்ளன. இக்காலியிடங்களில் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. முட்புதர்களில் விஷபூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. தீயணைப்பு துறையினர் அதிகளவில் பாம்புகளை பிடித்து வருகின்றனர். மேலும் காலிமனைகள் பள்ளமாக இருப்பதால், அங்கு மழை நீர் தேங்கி கொசுக்கள் மூலம் நோய் பரவும் அச்சமும் நிலவுகிறது.
கடந்த சில மாதங்களாக பெய்த மழைக்கு தேங்கிய மழை நீர், தற்போது சகதியாக காட்சி அளிக்கின்றன. இந்த புதர்களில் பன்றிகள் தங்கி மக்களுக்கு தொல்லை கொடுக்கின்றன. இதனால் நகராட்சி நிர்வாகம், காலிமனைகளில் உள்ள முட்புதர்களை அகற்றிக்கொள்ளவேண்டும்.
அகற்றாவிடில், நகராட்சியே அகற்றிவிட்டு, அதற்கான செலவு தொகையை வசூலிக்கும் என எச்சரிக்கை விடுத்தது. அதற்கு பின்னரும் காலிமனைகளில் உள்ள முட்புதர்கள், மழை நீரை அகற்றாமல் இருப்பதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

