/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளிகளுக்கு விடுமுறை கீழடியில் குவிந்த மக்கள்
/
பள்ளிகளுக்கு விடுமுறை கீழடியில் குவிந்த மக்கள்
ADDED : டிச 27, 2025 05:43 AM

கீழடி: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் குவிந்தனர்.
கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய 13 ஆயிரத்து 684 தொல் பொருட்கள் ஆறு கட்டட தொகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அருங்காட்சியகத்தினுள் மினி ஏ.சி., தியேட்டரில் கீழடி பற்றிய குறுப்படங்களும் ஒளிபரப்பப்படுகின்றன.
தற்போது அரையாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பலரும் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு கட்டட தொகுதிகளிலும் அந்தந்த கட்டட தொகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் பற்றிய அனிமேஷன் காட்சிகள் ஒளிபரப்பப்படுவதால் பார்வையாளர்கள் எளிதில் புரிந்து கொள்கின்றனர்.
மேலும் மெய்நிகர் காட்சி கூடம், பண்டைய கால விளையாட்டுகள் உள்ளிட்ட அம்சங்கள் பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விளக்கமளிக்க அகழாய்வு தளங்களில் பணியாற்றிய தொல்லியல் துறை மாணவ, மாணவியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

