/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுகாதார மையம் இல்லாமல் தவிக்கும் மலைக்கிராம மக்கள்
/
சுகாதார மையம் இல்லாமல் தவிக்கும் மலைக்கிராம மக்கள்
சுகாதார மையம் இல்லாமல் தவிக்கும் மலைக்கிராம மக்கள்
சுகாதார மையம் இல்லாமல் தவிக்கும் மலைக்கிராம மக்கள்
ADDED : ஜன 10, 2025 05:04 AM
எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே துணை சுகாதார நிலையம் இல்லாமல் மலைக்கிராம மக்கள் தவிக்கின்றனர்.
இவ்வொன்றியத்தில் மேலவண்ணாரிருப்பு, கீழவண்ணாரிருப்பு, வெள்ளிக்குன்றம்பட்டி, பொட்டபட்டி உள்ளிட்ட கிராமங்கள் மலைத் தொடர்களுக்கு நடுவே அமைந்துள்ளது. இப்பகுதிக்கு சாலை, பஸ் போக்குவரத்து வசதி குறைவாகவே உள்ள நிலையில், இங்குள்ள மக்கள் மருத்துவ தேவைகளுக்காக எஸ்.புதுார் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.
இரவு நேரங்களில் அவசர சிகிச்சை, பிரசவம் உள்ளிட்டவற்றிற்கு இப்பகுதி மக்கள் எஸ்.புதுார் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலவண்ணாரிருப்பில் ஏற்கனவே அம்மா மினி கிளினிக் துவக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மூடப்பட்டு விட்டது. எனவே அதே இடத்தில் நிரந்தரமாக துணை சுகாதார நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

