/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஒக்கூர் அகதிகள் முகாம் மக்களுக்கு குடிநீரால் கல் அடைப்பு பிரச்னை முதல்வரிடம் புகார்

ADDED : ஜன 23, 2025 04:11 AM
சிவகங்கை: ஒக்கூர் அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்காததால், கல் அடைப்பு பிரச்னை ஏற்படுவதாக முதல்வர் ஸ்டாலினிடம் புகார் அளித்தனர்.
காரைக்குடியில் இருந்து காரில் சிவகங்கை வந்த முதல்வர் ஸ்டாலின், நேற்று காலை 10:15 மணிக்கு சிவகங்கை அருகே ஒக்கூரில் உள்ள அகதிகள் முகாமிற்கு சென்றார். முகாமில் 227 குடும்பத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் இருப்பதோடு, குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இதனால், முகாமில் வசிப்பவர்களுக்கு கல் அடைப்பு போன்ற பிரச்னை ஏற்படுகிறது. எனவே முகாமில் வசிக்கும் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்' வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
அதே போன்று இங்குள்ள 227 வீடுகளில் 90 குடும்பத்திற்கு மட்டுமே புதிய வீடு கட்டி கொடுத்துள்ளனர். எஞ்சிய 137 குடும்பத்திற்கும் வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முகாமில் ஆய்வுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினிடம், ஒக்கூர் அகதிகள் முகாம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.