/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஏ.டி.எம்.,களில் பணமின்றி தவித்த மக்கள்
/
ஏ.டி.எம்.,களில் பணமின்றி தவித்த மக்கள்
ADDED : ஜன 17, 2025 05:19 AM
திருப்புவனம்: தொடர் விடுமுறையால் வங்கி ஏ.டி.எம்.,களில் பணமின்றி பொதுமக்கள் மிகுந்த தவிப்பிற்குள்ளாகினர். திருப்புவனத்திற்கு பொங்கல் விடுமுறையை ஒட்டி உறவினர் வீடுகளுக்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.
வங்கிகள் விடுமுறை என்பதால் பலரும் தங்களது தேவைக்கு ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இதுதவிர மதுரை -பரமக்குடி நான்கு வழிச்சாலையில் பயணம் மேற் கொள்பவர்களும் தங்களது தேவைக்கு நகருக்குள் உள்ள ஏ.டி.எம்., களை பயன்படுத்தி பணம் எடுத்து சென்றனர். ஒரே சமயத்தில் ஏராளமானோர் பணம் எடுத்ததால் ஏ.டி.எம்.,களில் விரைவில் பணம் காலியாகி விட்டது. பெரும்பாலான ஏ.டி.எம்.,களில் பணம் இல்லை.
பொங்கல் திருவிழா செலவிற்கு பணம் எடுக்க வந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.