/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை அருகே வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் மக்கள் அவதி
/
மானாமதுரை அருகே வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் மக்கள் அவதி
மானாமதுரை அருகே வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் மக்கள் அவதி
மானாமதுரை அருகே வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் மக்கள் அவதி
ADDED : டிச 18, 2024 07:50 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே அன்னவாசல் புதுார் கிராமத்தில் மழை நீர் வீடுகளை சூழ்ந்ததால் கிராம மக்கள் சிரமப்பட்டனர்.
இந்த கிராமத்தில் ஏராளமான வீடுகள் உள்ள நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக செய்த கனமழையினால் அருகே உள்ள அரிமண்டபம் கண்மாய் நிரம்பியதைத் தொடர்ந்து அங்கிருந்து தண்ணீர் வெளியேறி அன்னவாசல் புதுார் கிராமத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து கொண்டது. இப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற முடியாமல் சிரமத்திற்குள்ளாயினர்.
இரவு நேரங்களில் வீடுகளுக்குள் விஷப்பூச்சி வருவதால் மக்கள் துாங்க முடியாமல் தவித்தனர்.மழை காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் தேங்காவண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.