/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத மாற்றுத்திறனாளிகள்
/
மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத மாற்றுத்திறனாளிகள்
மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத மாற்றுத்திறனாளிகள்
மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத மாற்றுத்திறனாளிகள்
ADDED : நவ 21, 2025 04:43 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு அமைந்துள்ள முதல் தளத்திற்கு லிப்ட் அல்லது சாய்தள படிக்கட்டு வசதியை ஏற்படுத்த வேண்டும் என சிகிச்சைக்கு வருபவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் புறநோயாளிகள் பிரிவு காலை 7:30 முதல் மதியம் 12:30 மணி வரை செயல்படுகிறது. சிகிச்சைக்கு தினசரி 1000க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
இங்கு பொது மருத்துவம், எலும்பு முறிவு, குழந்தைகள் நலம், காது மூக்கு தொண்டை,சித்தா,ஆயுர்வேதம் உள்ளிட்ட சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் தரைதளம் முதல் தளம் என இரண்டு தளம் உள்ளது.
இதில் முதல் தளத்தில் காது மூக்கு தொண்டை, கண் மருத்துவ பிரிவு, பல் மருத்துவ பிரிவு, குழந்தைகள் பிரிவு,காசநோய்,மனநோய், தோல் சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகள் செயல்படுகிறது.
இங்கு மாற்றுத்திறனாளிகள் வரும்போது முதல் தளத்திற்கு செல்ல சிரமப்படுகின்றனர். லிப்ட், சாய்தள வசதி இல்லாததால் மாற்றுத்திறனாளிகளை தரை தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு துாக்கி செல்லும் சூழல் உள்ளது. எனவே மாற்றுத்திறனாளி கள் முதல்தளத்திற்கு சென்று சிகிச்சை பெற லிப்ட் அல்லது சாய்தள வசதி ஏற்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

