/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தும்பைபட்டியில் கிரானைட் குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் புகார்

ADDED : ஜூலை 22, 2025 03:43 AM
சிவகங்கை: சிங்கம்புணரி அருகே தும்பை பட்டியில் கிரானைட் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என கிராமத்தினர் கலெக்டர் பொற்கொடி யிடம் மனு அளித்தனர்.
சிங்கம்புணரி அருகே எம்.மாம்பட்டி ஊராட்சியில், தும்பைபட்டியில் கடந்த சில நாட்களாக கிரானைட் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்து உள்ளது. இது குறித்து மக்களிடம் கருத்து கேட்கவில்லை.
100 மீட்டருக்குள் பாதுகாக்கப்பட்ட வனக்காடு இருப்பதால், குவாரியில் வைக்கும் வெடிகள் மூலம் காட்டிற்குள் வசிக்கும் மான், காட்டு எருமை களுக்கு பாதிப்பு ஏற்படும்.
கிராமத்தில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில் குவாரி இருப்பதால் வெடி சத்தம், துாசி காற்று மூலம் மாசு ஏற்படுகிறது எனக்கூறி கிராமத்தினர் கலெக் டரிடம் மனு அளித்தனர். அவர் கனிம வளத்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.