/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை தடை கோரி மனு
/
மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை தடை கோரி மனு
ADDED : ஏப் 18, 2025 05:46 AM
சிவகங்கை: மானாமதுரையில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு தடை விதிக்க வேண்டும் என சர்வ கட்சியினர் சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.
மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் மருத்துவ கழிவு மறுசுழற்சி ஆலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு மருத்துவ கழிவு மறுசுழற்சி ஆலை வந்தால், சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள மானாமதுரை நகராட்சி, சூரக்குளம் பில்லறுத்தான், செய்களத்துார், கல்குறிச்சி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
எனவே இந்த ஆலைக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மானாமதுரையை சேர்ந்த பா.ஜ., -- தி.மு.க.,- அ.தி.மு.க.,மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் வந்து மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபியிடம் மனு அளித்தனர். கலெக்டரிடம், இந்த மனு மீதான விபரத்தை தெரிவிப்பதாக அவர் கூறினார்.

