தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணி நிரந்தரம் கோரி மனு

கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணி நிரந்தரம் கோரி மனு

கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணி நிரந்தரம் கோரி மனு


ADDED : ஆக 06, 2025 09:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2025 09:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை : தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் 10 ஆண்டுக்கும் மேல் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கலெக்டர் பொற்கொடியிடம் மனு அளித்தனர்.

சிவகங்கை மாவட்ட அளவில் கூட்டுறவு துறையின் கீழ் 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இச்சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர், நகை அடமான, மகளிர் குழு கடன் வழங்கப்படுகின்றன.

இச்சங்கங்களில் மக்களின் பயன்பாட்டிற்கென இ- சேவை மையங்கள் 2014 ம் ஆண்டு திறக்கப்பட்டது. இவற்றில் 110 சங்கங்களில் முதுகலை பட்டம், கூட்டுறவு மேலாண்மை பட்டயம் முடித்தவர்கள் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களாக சேர்ந்துள்ளனர்.

தற்காலிக சம்பள அடிப்படையில் இவர்களுக்கு மாதம் ரூ.6,000 முதல் 7,000 வரை வழங்கப்படுகிறது. இ- சேவை மைய பணிகளுடன் கூட்டுறவு கடன் சங்கங்களில் வரவு செலவு அறிக்கை, கடன் ஆவணம் தயாரித்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். எனவே கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரியும் தங்களை அரசு பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனக்கோரி, கம்ப்யூட்டர் ஆப்ப ரேட்டர்கள் சிவகங்கை கலெக்டர் பொற்கொடியிடம் மனு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us