ADDED : ஏப் 20, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : காரைக்குடியைச் சேர்ந்தவர் நுார்முகம்மது இஸ்மாயில் 23, உறவினர் முஹமது தாரிக் 22. இருவரும் பிப்.13ஆம் தேதி மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் சென்றனர்.
சில நாட்களுக்கு முன் நுாருல் இஸ்மாயில் சகோதரரிடம் அலைபேசியில் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார்.
பேசியவர் நுர்முகம்மது இஸ்மாயில், முஹமதுதாரிக் இருவரும் கடத்தப்பட்டுள்ளதாகவும், இருவரையும் விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.26 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும், பணம் கொடுக்காவிட்டால் இருவரையும் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவர்களது குடும்பத்தினர் கலெக்டர் ஆஷா அஜித்தை சந்தித்து இருவரையும் மீட்டுத் தரக்கோரி மனு அளித்தனர்.

