/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டவராயன்பட்டியில் பன்றிகள் தொல்லை
/
கண்டவராயன்பட்டியில் பன்றிகள் தொல்லை
ADDED : ஜூலை 05, 2025 11:15 PM
கண்டவராயன்பட்டி:
திருப்புத்துார் ஒன்றியம் கண்டவராயன்பட்டியில் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பன்றிகள் நடமாட்டம் துவங்கியுள்ளதால் சுகாதாரக்கேடு அதிகரிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டவராயன்பட்டியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பன்றிகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள்எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகம் பன்றிகள் வளர்ப்பை நிறுத்த உத்தரவிட்டது. தற்போது பத்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பன்றிகள் நடமாட்டம் துவங்கியுள்ளது.
இந்த பன்றிகள் பண்ணை முறையில் அடைத்து வளர்க்காமல் தெருக்களில் திரிய விட்டு வளர்க்கப்படுவதால் பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. தற்போது சிவன் கோயில் ஊருணி, கண்மாய் பகுதிகளில் நடமாட்டம் காணப்படுகிறது.
பன்றிகள் வளர்ப்பிற்கு தடை விதிக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.