/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிள்ளைவயல் காளி கோயில் கும்பாபிேஷகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
/
பிள்ளைவயல் காளி கோயில் கும்பாபிேஷகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
பிள்ளைவயல் காளி கோயில் கும்பாபிேஷகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
பிள்ளைவயல் காளி கோயில் கும்பாபிேஷகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ADDED : பிப் 11, 2025 05:11 AM

சிவகங்கை: சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் கும்பாபிேஷகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது.
ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில், அறங்காவலர் குழுவினர் உபயதாரர்கள் நிதி உதவியுடன் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி நிறைவுக்கு பின் பிப்.,8ம் தேதி கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் காலை அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக பூஜைகள் துவங்கின.
தொடர்ந்து முதல் யாகசாலை பூஜையில் இருந்து 4 கால யாகசாலை பூஜைகள் வரை நடந்தது.நேற்று காலை 5:30 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜை, அதனை தொடர்ந்து யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது.
பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் ராமசுப்பிரமணியராஜா உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் விநாயகர், முருகன், காளியம்மன் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிேஷகத்தில் பங்கேற்றனர்.
காளியம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.  மாலை வரை பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இரவு பிள்ளைவயல் காளியம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
நகராட்சி தலைவர் துரை ஆனந்த், கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், பிரியங்கா, அறங்காவலர் குழு தலைவர் காளீஸ்வரிசரவணன், உறுப்பினர்கள்ராம்தாஸ், விஜயகுமார், சரவணன், சேகர் பங்கேற்றனர். சிவகங்கை நகர் எஸ்.ஐ., செல்வபிரபு தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவில் பங்கேற்றவர்கள்:சிவகங்கை வேல்யூ ஆட்டோஸ் உரிமையாளர் கே.என்.,சுந்தர், கருணாம்பிகை இன்போசிஸ்டம் உரிமையாளர் நித்யா கண்ணப்பன், ஆரியபவன் கருப்பையா, ரகுபாஸ்கர், எஸ்.எம்., பில்டர்ஸ் சுந்தரமாணிக்கம், கிருத்திக் சுந்தர், மலைராம் புரமோட்டர்ஸ் பாண்டிவேல், அருண் ஸ்டூடியோ அசோக், கிராம உதவியாளர் அழகர்சாமி, ராஜேஸ்வரி, வழக்கறிஞர்கள் ராம்பிரபாகர், சவுந்திரராஜன், அனிதா ராஜ், பார்த்திபன், அசோக்மேத்தா, வெங்கடாசலம், அன்பு பில்டர்ஸ் எஸ்.பி., மீனாட்சி, பத்திரஎழுத்தர் சுரஜ்குமார், பாண்டியன் ஜெராக்ஸ் சுந்தரபாண்டியன், ஏ.சி.எஸ்., ரைஸ்மில் சண்முகநாதன், ஏ.ஆர்.,அன்ட் சன்ஸ் சந்திரன், மைதிலி ஜூவல்லர்ஸ் பாலாஜி, பாலாஜி ஜூவல்லர்ஸ் செல்வராஜ், எஸ்.கே.ஆர்., பில்டர்ஸ் ராமகிருஷ்ணன், அன்னபூரணி ஓட்டல் மீனாள் லட்சுமணன் குடும்பத்தினர்பங்கேற்றனர்.

