/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிள்ளையார்பட்டி தேர் வெள்ளோட்டம்
/
பிள்ளையார்பட்டி தேர் வெள்ளோட்டம்
ADDED : ஆக 20, 2025 11:37 PM

திருப்புத்துார் : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சண்டிகேஸ்வரருக்கான புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது.
நகரத்தார் கோயிலான இங்கு சதுர்த்தியை முன்னிட்டு பத்து நாட்கள் விழா நடைபெறும். 9ம் நாளில் விநாயகர் தேரிலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் எழுந்தருள தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு சண்டிகேஸ்வரருக்கு புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. நேற்று புதிய தேருக்கான வெள்ளோட்டத்தை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு வாஸ்து பூஜை நடந்தது.
காலை 7:15 மணிக்கு சிவாச்சார்யார்கள் கணபதி ேஹாம் உள்ளிட்ட யாகசாலை பூஜை நடத்தினர். யாகசாலையிலிருந்து 9 புனித நீர் கலசங்கள் புறப்பாடாகி தேரில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தன.காலை 9:45 மணிக்கு தேர் வெள்ளோட்டம் துவங்கியது.