/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா: ஆக.18ல் கொடியேற்றம் ஆக.26 ல் தேரோட்டம்
/
பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா: ஆக.18ல் கொடியேற்றம் ஆக.26 ல் தேரோட்டம்
பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா: ஆக.18ல் கொடியேற்றம் ஆக.26 ல் தேரோட்டம்
பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா: ஆக.18ல் கொடியேற்றம் ஆக.26 ல் தேரோட்டம்
ADDED : ஆக 07, 2025 11:46 PM
திருப்புத்துார்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் சதுர்த்திப் பெருவிழா ஆக.18 ல் துவங்குகிறது. ஆக.26 ல் தேரோட்டமும், ஆக.27 ல் சதுர்த்தி தீர்த்தவாரி உற்ஸவமும் நடைபெறும்.
நகரத்தார் கோயிலான இங்கு சதுர்த்திப் பெருவிழா பத்துநாட்கள் நடைபெறும். ஆக.18 காலையில் கொடிமரத்திற்கு பூஜை நடந்து கொடியேற்றம் நடைபெறும். மாலையில் சுவாமிக்கும்,ஆச்சார்யாருக்கும் காப்பு கட்டி உற்ஸவம் துவங்கும். தொடர்ந்து இரவில் தங்க மூஷிக வாகனத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். மறுநாள் முதல் எட்டாம் திருநாள் வரை காலை 9:30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். தினசரி இரவில் வாகனங்களில் விநாயகர் திருவீதி உலா நடைபெறும்.
ஆறாம் நாளில் ஆக.23 மாலையில் யானை வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறும். ஓன்பதாம் நாளான ஆக.26 காலையில் விநாயகர் தேரில் எழுந்தருளலும், மாலையில் தேரோட்டமும் நடைபெறும். அன்று மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விநாயகர் சதுர்த்தியன்று காலை கோயில் திருக்குளத்தில் சதுர்த்தித் தீர்த்தவாரி நடைபெறும். இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாட்டினை நடப்பு காரியக்காரர்கள் காரைக்குடி சித.பழனியப்பச் செட்டியார், நச்சாந்துபட்டி மு.குமரப்பச் செட்டியார் செய்கின்றனர்.