/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிள்ளையார்பட்டி - கைக்குரிச்சி புதிய தேசிய நெடுஞ்சாலை
/
பிள்ளையார்பட்டி - கைக்குரிச்சி புதிய தேசிய நெடுஞ்சாலை
பிள்ளையார்பட்டி - கைக்குரிச்சி புதிய தேசிய நெடுஞ்சாலை
பிள்ளையார்பட்டி - கைக்குரிச்சி புதிய தேசிய நெடுஞ்சாலை
ADDED : நவ 03, 2024 05:41 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே பிள்ளையார்பட்டியிலிருந்து கைக்குரிச்சிக்கு புதிய இருவழிச்சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கிறது. இதனால் திருப்புத்துார் --தஞ்சாவூர் பயண துாரம் குறையும்.
தற்போது மேலுார் -பிள்ளையார்பட்டி நான்குவழிச்சாலை பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்டது. பாலங்களிலிருந்து சர்வீஸ் ரோடு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் பிள்ளையார்பட்டியிலிருந்து தஞ்சாவூருக்கு புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. அதில் பிள்ளையார்பட்டியிலிருந்து 33.7 கி.மீ.துாரத்திற்கு கைக்குரிச்சி வரை 929 கோடியில் இருவழிச்சாலையும், கைக்குரிச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு 51.8 கி.மீ.க்கு நான்கு வழிச்சாலையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தற்போதைய திருப்புத்துார் -தஞ்சாவூர் பயண துாரமான 100 கி.மீ. துாரம் என்பதில் 10 கி.மீ. வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ரோட்டிற்கு நிலமெடுப்பிற்கு தற்போது சர்வே பணி நடந்து வருகிறது.
அது போல கொட்டாம்பட்டி -திருப்புத்துார் தேசிய நெடுஞ்சாலை இருவழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக உயர்த்தப்படுகிறது. இதனால் திருப்புத்துார் நகருக்கு வெளியே புறவழிச்சாலை அமைக்கவும் திட்டமிடப்படுகிறது.