தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கை தலைமை தபால் நிலையம்  முன் இடையூறாக பிளாஸ்டிக் குழாய்

 சிவகங்கை தலைமை தபால் நிலையம்  முன் இடையூறாக பிளாஸ்டிக் குழாய்

 சிவகங்கை தலைமை தபால் நிலையம்  முன் இடையூறாக பிளாஸ்டிக் குழாய்


ADDED : டிச 18, 2025 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கையில் தபால் அலுவலகம் முன் போக்குவரத்திற்கு இடையூறாக பிளாஸ்டிக் குழாய்களை போட்டு வைத்துள்ளனர்.

சிவகங்கை - தொண்டி ரோட்டில் தலைமை தபால் நிலையம், தபால் ஆய்வாளர், கண்காணிப்பாளர் அலுவலகங்கள் ஒரே கட்டடத்தில் செயல்படுகிறது. இந்த அலுவலகத்திற்கு தினமும் தபால் அனுப்பவும், சேமிப்பு கணக்குகளை துவக்க பலர் வந்து செல்கின்றனர். தொண்டி பாலம் அருகே அமைத்துள்ள சப்வே ரோடு வழியாக தான் ரயில்வே ஸ்டேஷன், நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் தபால் நிலையம் முன் போக்குவரத்திற்கு இடையூறாக பிளாஸ்டிக் குழாய்களை போட்டு வைத்துள்ளனர். இதனால் தபால் நிலையம், கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வாகனங்களில் வருவோர், தபால் நிலையம் முன் வாகனம் நிறுத்த போதிய இடமிருந்தும், அந்த இடத்தில் பிளாஸ்டிக் குழாய்களை அடுக்கி வைத்துள்ளதால், ரோட்டில் நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் காலை நேரங்களில் இந்த ரோட்டில் வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us