தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ படிப்புடன் விளையாட்டும் அவசியம்

படிப்புடன் விளையாட்டும் அவசியம்

படிப்புடன் விளையாட்டும் அவசியம்


ADDED : செப் 27, 2024 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 06:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமைச்சர் அறிவுரை

நெற்குப்பை: திருப்புத்துார் ஒன்றியம் நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிகளில் மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் தர வேண்டும்' என்று அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி அமைச்சர் பேசியதாவது: மாணவர்கள் ஆர்வமுள்ள விளையாட்டை தேர்வு செய்து விளையாட வேண்டும். படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் ஆர்வம் காட்டவேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி முக்கியமானது. நவீன உடற்பயிற்சி கருவிகளில் ஒன்றாக நின்ற நிலையில் சக்கரத்தை பெடல் செய்யும் கருவி உள்ளது. அதன் நேரடி வடிவமாக அரசு உங்களுக்கு சைக்கிளை வழங்கியுள்ளது. பள்ளிக்கு வர உதவுவது மட்டுமல்ல. மாணவர்களுக்கு நல்ல உடற்பயிற்சியுமாகும்.

நல்ல வலுவான உடற்கட்டை பெற சைக்கிள் பயணம் உதவுவதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது.விளையாட்டின் முக்கியத்துவம் கருதி தான்

முதல்வர் இளைஞரை அத்துறைக்கு அமைச்சராக்கியுள்ளார். பொதுத்தேர்வுகளில் அனைவரும் தேர்ச்சி பெற தயாராக வேண்டும். இவ்வாறு பேசினார்.

பள்ளிகளில் 10,12ம் வகுப்பு பொது தேர்வுகளில் முதலிடத்திற்கு 10 ஆயிரம், இரண்டமிடத்திற்கு ரூ 5ஆயிரம், மூன்றாமிடத்திற்கு ரூ 3 ஆயிரம் வீதம் அமைச்சர் வழங்கினார். மேலும் புரவலர் நிதியாக ரூ 10 ஆயிரமும் வழங்கினார்.

ஆ.தெக்கூர் எஸ்.வி.கே.மேல்நிலைப் பள்ளி, பூலாங்குறிச்சி, அரசு மேல்நிலைப்பள்ளி, ஏ.வேலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, கீழச்சிவல்பட்டி

எஸ்.எம்.எஸ்.மேல் நிலைப்பள்ளி, திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us