தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பயிற்சியாளர் இல்லாமல் பயிற்சி பெறும் வீரர்கள்

பயிற்சியாளர் இல்லாமல் பயிற்சி பெறும் வீரர்கள்

பயிற்சியாளர் இல்லாமல் பயிற்சி பெறும் வீரர்கள்


ADDED : ஜூன் 28, 2025 11:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 11:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்க பயிற்சி மையத்தில் பயிற்சியாளர் இல்லாததால் வீரர்கள் பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது.

சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி செயல்படுகிறது.

இங்கு கால்பந்து 30, கபடி 20, தடகளத்தில் 10 மாணவர்கள் என மொத்தம் 60 மாணவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கால்பந்து பயிற்சி அளிக்க நிரந்தர பயிற்சியாளர் ஒருவர், தடகள பயிற்சிக்கு ஒரு தற்காலிக பயிற்சியாளர் உள்ளனர்.

ஆனால் கபடி பயிற்சி அளிப்பதற்கு பயிற்சியாளர் இல்லை. கபடி பயிற்சி பெற மாநில அளவிலான மாணவர்கள் தேர்வாகி இங்கு தங்கியுள்ளனர்.

இவர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்சியாளர் இல்லாததால் தினசரி காலை மாலை நேரங்களில் தாங்களாகவே பயிற்சி பெறும் நிலை இருப்பதாகவும், தங்களுக்கு முறையான பயிற்சி வழங்க நிரந்தர பயிற்சியாளரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணா கூறுகையில், இங்கிருந்த கபடி பயிற்சியாளர் பணி மாறுதலில் விழுப்புரம் சென்று விட்டார். புதிய பயிற்சியாளர் வேண்டும் என்று அரசுக்கு கடிதம் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us